எமது இலங்கைத் திருநாடானது அனைத்து உலக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த எழில்கொள் நாடாகும் வருடா வருடம் எமது இயற்கையின் கொடை நிரம்பிய இலங்கைத் திரு நாட்டை பார்வையிட பலதரப்பட்ட நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயயணிகள் வருகை தருவது வழக்கம். அந்தவகையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப்பயணிகள் இன்றையதினம் (17.11.2025) நம் நாட்டிற்கு வருகைதந்ததையிட்டு இதுவரை வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 02 மில்லியனைக் கடந்துள்ளது என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையானது தெரிவித்துள்ளது.
தற்போது வருகைதந்த இரண்டு பிரான்ஸ் நாட்டவர்களும் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸிற்குச் சொந்தமான UL-504 விமானம் ஊடாக இன்று பிற்பகல் 1.30க்கு கட்டுநாயக்க சர்வதேச விமானம் ஊடாக இன்று பிற்பகல் 01.30 மணிக்கு கட்டுநாயயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
