அடெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் சரிவடைந்துள்ளது.
இலங்கை மத்தியவங்கி இன்று வெளியிட்ட தகவலின்படி இந்த சரிவு இனம்காணப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 200.90 ஆக உயர்வடைந்துள்ளது. அதேபோன்று டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபா 195.10 ஆக உயர்ந்துள்ளது.
அண்மையில் சீனாவிடமிருந்து இலங்கை புதிய கடனைப் பெற்ற பின்னர் ரூபாவின் மதிப்பு சற்று அதிகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.