2025ம் ஆண்டின் இறுதி அத்தியாயத்தில் இருக்கின்றோம் ஒவ்வொரு ஆண்டும் நமக்கு பல துன்பங்கள் துயரங்களுடன் தான முடிவடைந்து புத்தாண்டுட மலரும் அதேபோல் இந்த ஆண்டும் பெரும் துயர் சம்பவங்களுடன் கடந்துகொண்டிருக்கின்றது. யாருடைய தவறு என்று சரியாக சொல்ல முடியவில்லை இயற்கையின் தவறா அல்லது எம் தவறா ஏராளமான உறவுகள் வெள்ளத்தில் மூழ்கி இறந்த வண்ணமும் பாதிக்கப்பட்ட வண்ணமும் உள்ளார்கள்.
தற்போது நிலவும் மழையுடனான வானிலையால் அம்பாறை சாய்ந்தமருது , கரைவாகுப்பற்று ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 03 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் துயரத்தை ஏற்பத்தியுள்ளது. ஆற்றில் கார் அடித்துச்சென்று மூழ்கி உயரிருக்குப் போராடிய நிலையில் இறந்த காரில் பயணித்த மூவரையும் இராணுவத்தினர் மீட்டு கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசரப்பிரில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளார்கள்.
இந்த விபத்தில் 62 வயதுடைய கணவன், 59 வயதுடைய மனைவி மற்றும் அவர்களின் 06 வயதுடைய பேரப்பிள்ளை ஆகியோரே உயரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

