தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்ட பிரதேசங்கள்
நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சில கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் பொலிஸ் பிரிவுகளில் இன்று (20) முதல் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவின் பனன்கம்மன கிராம சேவகர் பிரிவில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம் பொலிஸ் பிரிவின் குருக்கள்புதுக்குளம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாம்பமுணுவ, கொறக்காபிட்டிய, மாவித்தார வடக்கு, பெலென்வத்தை மேற்கு, பெலென்வத்தை கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மொரட்டுமுல்லை பொலிஸ் பிரிவின் வில்லோரவத்தை மற்றும் மஹரகம பொலிஸ் பிரிவின் அரவ்வல, பமுனுவ கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தளை 473 கிராம சேவகர் பிரிவில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது.
கட்டான பொலிஸ் பிரிவின் KC சில்வாபுர, கதிரான வடக்கு கிராமத்தின் அட்டபகஹவத்தை பிரிவு, கதிரான தெற்கு கிராம சேவகர் பிரிவின் பேசகர்ம பிரிவு ஆகியன விடுவிக்கப்பட்டுள்ளன.
மஹர பொலிஸ் பிரிவின் எல்தெனிய கிழக்கு, சூரியபாலுவ தெற்கு, சூரியபாலுவ வடக்கு, கீழ் கரகஹமுண வடக்கு, மேல் கரகஹமுன வடக்கு ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள் கீழே…