நிலவும் மோசமான வானிலை காரணமாக அலவதுகொட பொலிஸ் பிரிவின் அங்கும்புர பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கும்புர அலவதுகொட வீதியில் ரம்புக் எல பகுதியில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிலச்சரிவு காரணமாக இடம்பெயர்வு மற்றும் உயிர் இழப்புக்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வந்தாலும், இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று காவல்துறை கூறுகிறது. குறித்த கிராமத்தில் சுமார் 800 குடும்பங்கள் வசித்து வந்தன, அவர்களில் பெரும்பாலனோர் இப்போது காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கண்டி அரநாயக்க அம்பலாங்கந்தையில் 120 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மண்சரிவு காரணமாக சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிரமம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
கண்டி ஹரிஸ்பத்துவ மாவட்டத்தின் அலவதுகொடை கல்கொட்டுவ பகுதியில் இன்று காலை பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக உள்ர் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் தெரிவிக்கையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நிலத்தின் நிலைமை மிகவும் அமைதியற்றதும் ஆபத்தானதுமாக இருப்பதால் மீட்புக் குழுக்கள் அந்தப் பகுதிக்கு செல்ல முடியவில்லை. மேலும் 40 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் தொடர்வதால் அணுகுவதில் மிகுந்த சிரமம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெலிமடை கெப்பிட்டிப்பொல காவல் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் தற்போது வரையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப்பணிகள் தொடர்தும் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில் இதன்காரணமாக வெலிமடை – நுவரெலியா வீதியின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து காணமல் போனவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
