இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான நிலையில் ஐந்து விமானப்படை வீரர்கள் மீட்கப்பட்டு லுனுவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக மாராவிளை தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இன்று (30.11.2025) பிற்பகல் லுனுவில மற்றும் வென்னப்புவ இடையேயான பகுதியில் குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த நேரத்தில் இரண்டு விமானிகள் உட்பட ஐந்து விமானப்படை வீரர்கள் அதில் இருந்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லுனுவில பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்க சென்ற ஹெலிகொப்டர் ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப்படை மத்திய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
விமானப்படைத் தளபதி, ஏர் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் உத்தரவின் பேரில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
