வென்னப்புவ, லுனுவிலவில் அண்மையில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் விமானியான விங் கமாண்டர் சியம்பலாபிட்டிய அவர்கள் எதிர்பாரதவிதமாக உயிரிழந்தார். இராணுவ வீரர் சியம்பலாபிட்டிய அவர்களின் இறுதிச்சடங்கு இன்றையதினம் ரத்மலானையில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்றது.
இந்த சமயத்தில் ஜனாதிபதி அவர்கள் நேரடியாக விஜயம் செய்து குழுத்தலைவர் சியம்பலாபிட்டியவின் பூதவுடலிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும் சியம்பலாபிட்டிய அவர்களின் மனைவி மற்றும் பெற்றோர், சகோதரர்கள், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
அமைச்சர் நளின் ஜயதிஸ்ஸ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், விமானப்படைத் துணைத் தளபதி சம்பத் துயாகொந்த ஆகியோரும் இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியுடன் இருந்தார்கள்.


