நிதியத்திற்கு இதுவரையில் 697 மில்லியன் ரூபாய்க்கும் அதிக நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2ம் திகதி வரையில் 19,000 இற்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இலங்கையர்கள் பணத்தை வைப்பிலிட்டிருந்தனர். நிதி, திட்டடமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும வெளியிடட்ட விஷேட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கியின் கீழ் இயங்கும் கணக்கின் ஊடாக இதுவரை 30,470 இற்கும் மேற்பட்ட வைப்புக்கள் (Transaction) இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கும் வெளிநாட்டு நாணயத்தில் வைப்பிலிடக்கூடிய கணக்குகள் ஊடாக இந்த நிதியத்திற்கு சுமார் 61 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
33 நாடுகளிலிருந்து உரிய கணக்குகளிற்கு இந்தப் பணம் கிடைத்துள்ளது. அதற்கமைய, ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு சுமார் 700 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக திறைசேரி செய்றபாடுகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக சூரியப்பெரும மேலும் தெரிவித்தார்.
