பத்து நாள் குழந்தை உட்பட வடக்கில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் விபரம் வெளியானது!!

வட மாகாணத்தில் 1027 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 85 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 10 மாதக் குழந்தையும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 10 நாள் குழந்தையும் உள்ளடக்கம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மானிப்பாய் பிரதேச மருத்துவமனையில் 11 பேருக்கும், கரவெட்டி, நல்லூர், யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா 10 பேருக்கும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலை ஆகியவற்றில் தலா 8 பேருக்கும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 3 பேருக்கும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், அளவெட்டி பிரதேச மருத்துவமனையில் 2 பேருக்கும் என 64 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், மாவட்ட மருத்துவமனையில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மாவட்ட மருத்துவமனையில் 2 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கும், மாவட்ட மருத்துவமனையில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *