நீர்வீழ்ச்சியில் கிடைத்த பஞ்ச லிங்கங்களை பாதுகாக்கும் நாகங்கள்! எல்லை மீறினால் உயிருக்கு ஆபத்து? எங்கு தெரியுமா????
இலங்கை, தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்பு ஒரு நாடாகும்.
நான்கு பக்கமும் நீர் சூழ, மலைகளும், அடர்ந்த காடுகளும் அதன் நடுவே விசாலமான நீர் வீழ்ச்சிக்களும் என சொர்க்கத்தையே கண்முன் காட்டிவிடுவதாய் அமைந்ததுதான் இலங்கைத் தீவு.
நுவரெலியா இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரமாகும். எப்போதும் குளுகுளுவென வானிலை இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.
இலங்கையில் உள்ள நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் டன்சினன் தூவான கங்கை நீர்வீழ்ச்சி ஓர் இயற்கையின் அதிசயம்.
இந்நீர்வீழ்ச்சி 100 மீற்றர் உயரத்தில் பூண்டுலோயிவிலிருந்து நுவரெலியா செல்லும் வீதியில் டன்சினன் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் அமைந்துள்ளது.
இங்கே வரும் சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்சியின் அழகை ரசித்துவிட்டு கோயில் தரிசனத்தில் ஈடுபட்டு செல்வர்.
இக்கோவில் மிக சக்திவாய்ந்ததொன்றாகும் .
காரணம் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது.
குறிப்பாக இந் நீர்வீழ்ச்சியிலிருந்து ஐந்து சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஐந்து லிங்கங்களும் கோவிலில் வைக்கப்பட்டுள்ளதோடு அந்த சிவலிங்கங்களை நாகங்கள் அடிக்கடி வந்து பாதுகாப்பதாகவும் கூறப்படுகின்றது.
கோவில் அச்சகர் இல்லாத போது அர்ச்சகர் உருவில் வேறொரு நபர் வருகை தந்து பக்தர்களுக்கு பூசைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த அற்புதத்தை பலமுறை பலர் கூறியதாகவும் அங்கு உள்ள பூசகர் கூறியுள்ளார்.
அது மட்டும் இல்லை, பக்தி இருந்தால் மட்டும் தான் கடவுள் தரிசனத்தை காண முடியுமாம்.
எல்லை மீறி கடவுளை கொச்சை படுத்தினால் சில சமயம் உயிருக்கு கூட ஆபத்தை ஏற்படுத்துமாம்.
இங்குவரும் சுற்றுலாப்பயணிகளின் கண்களை கவர்ந்திழுக்கும் தன்மை இந்நீந்நீர்வீழ்ச்சிக்கு உண்டு. அதனால் வருடம் முழுவதும் உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை மிக வெகுவாக காணப்படுகின்றது.
கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் இருந்து மீண்ட பின்னர் நாமும் ஒருதடவை தூவான கங்கை எனும் டன்சினன் நீர்வீழ்சியின் அழகை ரசித்து விட்டு வருவோம்.