உலகளவில் முன்னணி ஓடிடி தளமாக நெட்பிளிக்ஸ் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் நெட்பிளிக்ஸ், பிரபல ஹாலிவுட் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தை ரூ.7.44 இலட்சம் கோடிக்கு நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோக்கள், அவர்கள் தயாரித்த பிரபல திரைப்படங்கள், HBO Max ஓடிடி தளம் ஆகியவற்றை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கையகப்படுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தின் ஹாரி பாட்டர் திரைப்படங்கள், டிசி காமிக்ஸ் திரைப்படங்கள், கேம் ஆஃப் த்ரோன்ஸ் பல வெப் சீரிஸ்கள் ஆகியவை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமாகியுள்ளது. இதனால் இவை இனி நெட்பிளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்க உள்ளது.
முன்னதாக, வார்னர் பிரதஸ் நிறுவனம் விற்பனைக்கு வருவதாக அறிவிப்பு வெளியான நிலையில் பல நிறுவனங்கள் வாங்க போட்டியிட்ட நிலையில் நெட்பிளிக்ஸ் வெற்றிகரமாக நிறுவனத்தை கைப்பற்றி உள்ளது.
