பணி பகிஸ்கரிப்பில் குதித்த ஆசிரியர்கள்!!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒன்லைன் முறையில் கற்பித்தல் நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் ஆசிரியர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட உள்ளனர்.
இந்த பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை முதல் நடத்தப்படுகிறது.
அண்மையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றி போராட்டம் நடத்திய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தரப்பினர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பை தெரிவிக்கவே மேற்படி பணிபகிஸ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.