வல்வெட்டித்துறையில் நடந்த கொடூரம் – கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தை!!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று  நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தினால் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச் சென்று அனுமதித்தபோதே அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *