ஹம்பாந்தோட்டையில் நில அதிர்வு!!
ஹம்பாந்தோட்டை – லுணுகம்வெஹெர பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் நிலையம் அறிவித்துள்ளது.
இன்று காலை 10.38 மணியளவில் 2.4 ரிச்டர் அளவில் உணரப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வு ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது.
இதனால் ஏற்படடுள்ள சேத விபரம் தொடர்பில் எதுவும் வெளியாகவில்லை.