நடுக் கடலில் தத்தளித்த சோமாலி மீனவர்களை மீட்ட இலங்கை மீனவர்கள்!

நடுக் கடலில் தத்தளித்த நான்கு சோமாலிய மீனவர்களை காப்பற்றிய பேருவளை மீனவர்கள் அவர்களில் இருவரை தமது ஆழ்கடல் மீன்பிடி படகின் மூலம் பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். 25 மற்றும் 30 வயதான சோமாலிய மீனவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக சென்ற மீனவர்கள், நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு சோமாலிய மீனவர்களை கண்டுள்ளனர்.

அந்த மீனவர்களில் தலா இரண்டு பேரை மீனவர்கள் இரண்டு படகுகளில் ஏற்றிக்கொண்டுள்ளனர். ஏனைய இரண்டு பேரை ஏற்றிய ஆழ்கடல் மீன்பிடி படகு அடுத்த சில தினங்களில் பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு வந்து சேரவுள்ளது என கரையோர பாதுகாப்பு படை அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கரைக்கு அழைத்து வரப்பட்ட சோமாலிய மீனவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படவுள்ளதுடன் அடுத்தக் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

பேருவளை மீனவர்கள் மற்றும் சோமாலிய மீனவர்கள், அவர்களின் ஆழ்கடல் மீன்பிடி படகு என்பன கடற்படையின் கரையோர பாதுகாப்பு அதிகாரிகளின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *