மாகாண சபை தேர்தலை நடத்தும் சூழல் தற்போதைக்கு இல்லை…. அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்!!
மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய சூழல் தற்போதைக்கு இல்லை என மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் மன்ற அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் (Janaka Bandara Tennakoon) தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து எதிர்வரும் காலத்தில் தேர்தல் பற்றி முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு முற்பகுதியில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அமெரிக்காவில் வைத்து தெரிவித்திருந்தார்.
அத்துடன் மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) புதல்வாரன ரோகித்த ராஜபக்சவும் (Rohotha Rajapaksa) முதலரமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளார் என தென்னிலங்கை ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் அவர் இந்த விடயத்தினை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.