அத்தியாவசிய பொருட்களுக்கு புதிய கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!!
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajabaksha) தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையை நீக்க தீர்மானிக்கப்பட்டது.
நேற்று பிற்பகல் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், பால் மா, சமையல் எரிவாயு, சீமெந்து மற்றும் கோதுமை மா ஆகிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையே நேற்று நீக்க தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில்,
அவற்றுக்கான புதிய விலைகள் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், தேவையற்ற அதிக விலை உயர்வுக்கு இடமளிக்க வேண்டாம் என நேற்றைய தினம் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் லசந்த அழகியவண்ண (Lasantha Alagiyawanna) தெரிவித்திருந்தார்.
இதேவேளை, சமையல் எரிவாயுவின் விலையில் திருத்தம் மேற்கொள்வது குறித்து இன்றைய தினம் கலந்துரையாடி இறுதித் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெசார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.