தொடங்கிவைக்கப்பட்டது முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரையான மீனவர்களின் போராட்டம்!!
முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை நோக்கிய மீனவர்களின் போராட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.
இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த போராட்டம் முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் காலை 7.00 மணிக்கு தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட படகுகளுடன் மீனவர்கள் போராட்டத்தில் பங்குகொண்டுள்ளனர்.
இழுவைப் படகுகள் தடைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முல்லைத்தீவு தொடக்கம் பருத்தித்துறை வரையில் மேற்கொள்ளப்படுகின்ற மீனவர்கள் போராட்டத்தில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான,
எஸ்.சிறீதரன், இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழரசு கட்சியின் பிரமுகர்கள் மீனவர்கள் என பலர் கலந்துகொண்டு பருத்தித்துறை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்கள்.