இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது அமெரிக்காவின் டக்லஸ் மொன்றோ கப்பல்!!
அமெரிக்காவின் டக்லஸ் மொன்றோ கப்பல் இலங்கை கடற்படைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த கப்பல் அமெரிக்காவில் மெச்சிக்கோ பிராந்தியத்தில் சியேட்டில் துறைமுகத்தில் உள்ள அமெரிக்க கரையோர பாதுகாப்பு முகாமையில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது.
சமூத்திர பிராந்தியத்தில் பொதுவான சவால்களை வெற்றி கொள்வதற்கான பங்குடமையை செயற்பாட்டை வலுவூட்டுதல் மற்றும் மேம்படுத்தும் நோக்குடன் இலங்கை கடற்படைக்கு அமெரிக்க கரையோர பாகாப்பு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இரண்டாவது கப்பல் இதுவாகும்.
இலங்கை கடற்படை நீண்டதூர கடல் பயணத்தை அடுத்த வருடம் மேற்கொள்ளவுள்ளது.
இலங்கை கடற்படை வரலாற்றில் முதல் தடவையாக அடுத்த வருடம் நீண்டகாலம் கடல் மார்க்கமாக செல்லவுள்ளது.
அமெரிக்காவின் சியட்டல் துறைமுகத்திலிருந்து பசுபிக் சமுத்திரம் மற்றும் இந்து சமுத்திரத்தின் ஊடாக இந்த கடல் பயணம் மேற்கொள்ளப்படும்.
இந்த கப்பல் மூலம் எதிர்வரும் வருடங்களில் இலங்கை கடற்படை மேற்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளை மேலும் விரிவுபடுத்த முடியும் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.