முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பாக இலங்கை போலீசாரை அரசியல் அழுத்தத்தில் இருந்தது பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது .
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான , கொழும்பு மோதர பகுதியிலுள்ள பிராதீபா மண்டபத்திற்கு அருகிலுள்ள இரண்டு ஏக்கர் 16 பேர்ச்ஸஸ் காணியை மஹிந்த ரஜபக்ச ஆட்சியில் ஐம்பது இலட்சத்திற்கு குத்தகை கொடுத்து 4600 மில்லியன் ரூபா நட்டத்தை ஏட்படுத்தியுள்ளார்.
இந்தக் காணி முப்பது வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போலீசாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பதுகாக்கும் சர்வதேச அமைப்பு இணையத்தில் குறிப்பிட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிட்டுளதாவது, மாளிகாவத்தை வாகன நிறுத்துமிடத்தை குத்தகைக்கு வழங்கினால் ஒரு மாதத்திற்கான நட்டம் 45000 ரூபாவாகும் .
அதோடு சான்ச்சி ஆராய்சசி மாவத்தையில் உள்ள வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடுகளை புனரமைப்பதற்க்காக 68 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது . ஆனால் அந்த பணத்திற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை .ஒரு வீட்டில் கூட எவ்வித புனரமைப்பும் செய்யப்படவில்லை.
அனால் புணரமைப்பு செய்யப்பட்டதாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.மொரட்டுவ சொய்சாபுர வீடமைப்பு திட்டத்தில் அரகல போராட்டத்தில் தீ வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நன்கு பேருக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்கள் குறித்த பாதிப்புக்காக பல கோடி ரூபாய்களை நாட்டமாக பெற்று கொண்டவர்களாவர் .இவர்கள் மக்களின் பணத்தை , தங்களின் பரம்பரை சொத்துக்களாக பகிர்ந்து கொண்ட விதங்கள் தான் இவை .இந்த பாதிப்புக்களையே மக்கள் இப்போது அனுபவித்து கொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
