நேற்றையதினம் [26.12.2025] துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்த முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார்
மட்டுவில் கிழக்கு , சாவகச்சேரியை சேர்ந்த அருணாசலாம் சத்தியசீலன் வயது [75] என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் கனகம் புளியடி வீதியினூடாக ,புத்தூர் சந்தியூடாக கோவிலுக்கு சென்ற வேலையில் இவ்விபத்து இடம் பெற்றுள்ளது , மெய்கண்டான் சந்திக்கு பின்னால் இருந்து வாந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் மயக்கமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டர்.அவரை பரிசோத்தித்த வைத்தியர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக குறிப்பிட்டனர். மற்றும் மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி போலீசார் நடாத்தி வருகின்றனர்
