டெலிகிராம் நிறுவுநரான பவேல் துரோவ் வெளியிடட அறிவிப்பானது , விந்தணுவை தானம் பெற்று ,ஐவிஎப் முறையில் குழந்தைக்கு பெற்றால் , தன்னுடைய சொத்தில் சம பங்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார் மற்றும் இது பெண்களுக்கு அதிர்ச்சி காரமான தகவலாக பரவி வருகிறது.
விந்தணுவை தானமாகப்பெற்று ஐவிஎப் சிகிச்சை மூலம் கருவுற்றாள் சிகிச்சை செலவு தானே ஏட்பதாகவும் அறிவித்துள்ளார். தன்னுடைய ரூ.1.52 கோடி சொத்தில் ,பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் சமமாக பங்கு பிரித்து கொடுக்கப்படும் என்றும் 41 வயது பவெல் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு , தான் அளித்த விந்தணு தானம் மூலம் சுமார் 12 நாடுகளில் 100 மேட்பட்ட குழந்தைகள் தனக்கு பிறந்திருப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்திருந்தார் தற்போது 100 குழந்தைகள் போதாது வென்றும் மேலும் தன்னுடைய விந்தணுவை தானம் பெற்று குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் இளம் பெண்களுக்கு பல்வேறு சலுகைகளும் என அவர் அறிவித்துள்ளார்.
அதாவது 39 வயதுக்கு உட்படட பெண்கள் இவரது சலுகையை பெறலாம், சட்ட சிக்கல்களை தவிர்க்க பெண்களுக்கு திருமணமாகியிருக்க கூடாது , நன்கு படித்த ஆரோக்கியமாக பெண்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு என்றும் ஒரு மருத்துவமனை இணையத்தளதில் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது தனக்கு பிறந்த குழந்தைகளை அடையாளம் காணும் வகையில் ,தன்னுடைய மரபணு சோதனையை பொது வெளியில் வெளியிட்டு அதன் மூலம் தனக்கு பிறக்கும் குழந்தைகளை அடையாளம் காணவும் இவர் திட்டமிட்டுள்ளார். இதர்கெல்லாம் அவர் ஒரு காரணமும் கூறியுள்ளர் ‘அதாவது ஆண்களின் விந்தணு தரம் குறைந்து வருவதால் , சமூக பொறுப்புணர்வோடுதான் இந்த தானம் செய்து வருவதாக’ துரோவ் குறிப்பிட்டுள்ளார்.
