ஆஸ்திரேலியா , இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஆஷஸ் டெஸ்ட் மெல்பேர்னில் நேற்று முன்தினம் தொடங்கியது . இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 152 ரங்களுள் ஆல் அவுட் ஆனது தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 110 ரன்களுடன் ஆல் அவுட் ஆனது
இதையடுத்து 42 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 132 ரன்களுடன் ஆல் அவுட் ஆனது . இதன் மூலம் 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் 6விக்கெட் இழப்பிற்க்கு 178 ரன்களை சேர்த்தது . இதனால் ஆஸ்திரேலியாவை 4 விக்கெட்கள் வித்தியசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது
இந்நிலையில் .இந்த வெற்றியின் மூலம் 14 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து அணி வென்றுள்ளது.கடந்த 2011 ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்றது. அதன் பின்னர் கடந்த 14 ஆண்டுக்காக ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து வெற்றி பெறவில்லை . தற்போது 5 ஆயிரத்து 468 நாட்களுக்கு பின்னர் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிபெற்றுள்ளது
