பொறியியலாளர்களும் எதிர்காலத்தில் கடமையில் இருந்து நீக்கப்படுவார்கள்….. மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம்!!
மின் உற்பத்தி நிலையங்களில் பணியாற்றும் பொறியியலாளர்களும் எதிர்காலத்தில் கடமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையின் போதும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் இயங்குதளங்களின் பொறியியலாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அடுத்த கட்டமாக அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவாடு தெரிவித்தார்.
மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையானது படிப்படியாக தீவிரப்படுத்தப்பட்டு இறுதியில் வேலைநிறுத்தம் செய்யப்படும் வரை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
வேலைநிறுத்தம் நடத்தப்பட்டால் நாடு முழுவதும் இருளில் மூழ்கிவிடும் என அவர் தெரிவித்துள்ளார்.