முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – இந்திய மாநில அரசு உத்தரவு!!
Home news
news
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு உத்தரவு!!
By fathima – April 5, 2021 0
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு உத்தரவு!!
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு உத்தரவு!!
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு உத்தரவு!!
கர்நாடகாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
கர்நாடகாவில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதற்காக அம்மாநிலத்தில் ஏப்ரல் 20 வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 1 முதல் 9 வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதே போல கல்லூரிகளிலும் தேர்வு எழுதவுள்ளவர்கள் தவிர பிற மாணவர்களின் நேரடி வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்க கொரோனா பரவலின் இரண்டாம் அலை மே மாதம் இறுதி வரை நீடிக்கக்கூடும் என்பதால் பள்ளி, கல்லூரிகளை மூடக்கோரி தொழில் நுட்ப ஆலோசனை குழு அரசுக்கு எச்சரித்து வருகிறது. இதனால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கர்நாடகா மாநிலத்தின் பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எஸ்.சுரேஷ் குமார் தலைமையில் இன்று (05-04-2021) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லாமல் தேர்ச்சி பெறுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.