கிளிநொச்சியில் காரில்(NP CAH 6552) வந்த இளைஞர் கும்பலினால் 17 வயது பாடசாலை மாணவி கடத்தல்!!
முல்லைத்தீவு காவல் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் வெள்ளை நிற காரில் வந்த கும்பலினால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குமுழமுனை கரடிப்பூவல் வீதியில் வைத்து வீதியில் வைத்தே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
NP CAH 6552 என்ற இலக்கமுடைய வெள்ளைக்கார் ஒன்றில் வந்த நான்கு பேர் கொண்ட இளைஞர் கும்பலொன்று துவிச்சக்கர வண்டியில் பயணித்த மாணவியினை,
கடத்தி சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
மாணவி கடத்தலுக்கு முக்கிய காரணமாக இருந்த இரண்டு இளைஞர்களையும்
கடத்தி செல்லப்பட்ட காரினையும் காவல்துறையினர் தேடி வருவதுடன்,
கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக மாணவியின் தொடர்பு இல்லாத நிலையில் பெற்றோர் தவித்து வருகின்றதாக கூறப்படுகின்றது.