வீடொன்றினுள் நுழைந்து சரமாரி துப்பாக்கிச் சூடு – பறிபோனது 23 வயது இளைஞரின் உயிர்….. முல்லைதீவில் சம்பவம்!!
முல்லைத்தீவு – மல்லாவி காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை,
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைதுசெய்ய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.