சுட்டுக் கொல்லப்பட்டது 26 அடி நீல உலகின் மிகப்பெரிய பாம்பு!!

அமேசான் மழைக்காடுகளில் இருந்த உலகின் மிகப்பெரிய பாம்பு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

இந்த பெரிய பாம்பானது கடந்த 24 ஆம் திகதி இறந்து கிடந்ததாகவும் இது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பாம்மை அமேசான் மழைக்காடுகளில் அண்மையில் கண்டுபிடித்தனர்.

அனா ஜூலியா என்று அழைக்கப்பட்ட இந்த பாம்பானது 26 அடி உயரமும், 200கிலோ எடையும் கொண்டுள்ளது.

இந்நிலையில்,

அனா ஜூலியின் 26 அடி நீளமான உயிரற்ற உடல் தெற்கு பிரேசிலின் மாட்டோ க்ரோசோ டோ சுல்(Mato Grosso do Sul) மாநிலத்தில் உள்ள போனிட்டோ கிராமப் பகுதியில் உள்ள ஃபார்மோசோ ஆற்றில்(Formoso River) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் வேட்டைக்காரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கேள்விப்பட்ட விஞ்ஞானிகள் உலகின் மிகப்பெரிய பாம்பை இழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *