நீரில் மூழ்கி உயிரிழந்த 79 வயது பெண் மீண்டும் உயிருடன்….. உறைந்து போன சுற்றத்தார்!!
நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிர் பெற்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் கட்டுபொத்த பொல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டு
நீதவானின் விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்த நிலையில் பெண் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டுபொத்த பொல்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே நீரில் மூழ்கி உள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவுக்குப் பின்னர் அவர் காணாமல் போயுள்ளார்.
நேற்று காலை 6.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்
நேற்று முன்தினம்(19/05/2023) இரவு உறங்கச் சென்ற பெண் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது.
நேற்று(20/05/2023) காலை 7.00 மணியளவில் உறவினர்கள் அப்பகுதியில் தேடியபோது வீட்டுக்கு அருகிலுள்ள ஏரியில் அவரது உடைமைகள் சில காணப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,
நீர்ச்.செடிகள் நசுங்கிய பாதையிலிருந்த ஏரிக்கரைக்கு தாய் சென்றிருப்பதனை மருமகள் அவதானித்துள்ளதுடன் அப்போது அவரின் உடல் நீரில் மிதப்பதாக அவதானித்துள்ளார்.
இது குறித்து உறவினர்கள் கட்டுபொத்த காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
பின்னர்,
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதுடன் விசாரணை நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்புடன் 200 க்கும் மேற்பட்ட கிராமத்தவர்கள் அங்கு கூடியிருந்தனர்.
காலை 10 மணியளவில் அந்தப் பெண்ணின் தலை அசைவதை பார்த்த மக்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில்,
மிகுந்த சிரமத்தின் மத்தியில் இளைஞர்கள் சிலர் குறித்த பெண்ணின் உடல் இருக்கும் இடத்தை நெருங்கியுள்ளனர்.
அதன் பின்னர்,
இறந்துவிட்டதாகக் கூறப்படும் பெண் உயிரிழக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது.
அவரது மகனும் பிரதேசவாசிகளும் அவரை கட்டுபொத்த பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதேவேளை,
குறித்த பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு குறித்த பெண்ணின் வீட்டில் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.