செங்கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல் மீது ஆளில்லா விமானம் தாக்குதல்….. மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல்!!
மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்ற நிலையில் செங்கடல் பகுதியில் சென்றுகொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் (03/12/2023) இடம்பெற்ற இந்தத் தாக்குதல் சுமார் ஐந்து மணி நேரம் வரை தொடர்ந்து நடந்ததாகவும் அமெரிக்க பாதுகாப்புத் துறையான பென்டகன் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நிலவி வரும் போர் காரணமாக அங்கு அமைதியற்ற சூழல் காணப்பட்ட நிலையில் அமெரிக்கப் போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கப் போர்க்கப்பல் மீது குறைந்தது இரண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம்.
ஓமானின் சானா என்ற பகுதியில் இருந்து காலை 10 மணியளவில் தொடங்கிய இந்தத் தாக்குதல் அடுத்த ஐந்து மணி நேரம் வரை நீடித்தது.
ஓமானிலுள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம், ஏனெனில் கடந்த காலங்களிலும் செங்கடல் பகுதியில் இவ்வாறான தாக்குதல்களை இவர்கள் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல்,
காசா பகுதியில் ஹமாஸ் மீது தாக்குதல்களை நடத்தி இஸ்ரேலைக் குறிவைத்தும் ஹவுதி குழு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றது.” என பென்டகன் கூறியுள்ளது.
ஆனால்,
இது தொடர்பாக ஹவுதி தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கவும் இதுவரை அளிக்காத நிலையில்
விரைவில் இது தொடர்பாக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக ஹவுதி செய்தித் தொடர்பாளர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.