விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அறைக்கு தீ வைத்து….. தானும் தீயில் குதித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி!!
வெலிகம, கும்பல்கம குருந்துவத்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த சுற்றுலா பயணி ஒருவர் விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அறைக்கு தீ வைத்துள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று(02/09/2023) பிற்பகல் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் ஆத்திரமடைந்த சுற்றுலா பயணி விடுதி உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
33 வயதான இந்த எகிப்திய சுற்றுலாப் பயணி சுமார் மூன்று வருடங்களாக இந்த சுற்றுலா விடுதியில் தங்கியிருந்ததாகவும்
ஒரு மாத காலத்துக்கான சுற்றுலா விடுதிக்கு செலுத்த வேண்டிய பணத்தை குறித்த சுற்றுலா பயணி செலுத்தத் தவறியுள்ளார்.
இந்நிலையில்,
விடுதி உரிமையாளர் அதனை வாங்குவதற்கு முற்பட்ட பொழுது தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக விசாரணையின் பின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை,
குறித்த சுற்றுலா பயணி தாம் தங்கியிருந்த அறையில் இருந்த படுக்கைக்கு தீ வைத்துவிட்டு,
எரிவாயு சிலிண்டரை அந்த இடத்தில் வீசிவிட்டு அவரும் தீயில் குதித்துள்ளதாக காவல்துறையினர் மேலும் கூறியுள்ளனர்.
வெலிகம தலைமையக காவல் அதிகாரிகள் குழுவொன்று வந்து சுற்றுலா பயணியை தீயில் இருந்து மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் வெலிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.