மீன் வெட்டியது தவறு என மனைவியியை வெட்டிய கணவன்….. அதே கத்தியை பறித்து கணவனை வெட்டிய மனைவி!!
யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்டு பாடுகாயமடைந்த நிலையில்,
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
சந்தைக்கு சென்று மீனுடன் வந்த கணவன் அதனை வெட்டுமாறு மனைவியிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில்,
மீனினை மனைவி வெட்டிக் கொண்டிருந்த போது வெட்டியது தவறு எனக் கூறி மீன் வெட்டிய கத்தியை பறித்து மனைவி மீது வெட்டியுள்ளார்.
இந்நிலையில்,
அதே கத்தியினை பறித்த மனைவி கணவனை வெட்டியுள்ளார்.
இருவரும் வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டனர்.