யாழ் – வெலிங்டன் சந்தியில் வயோதிபரை அடித்து தூக்கிய நபர்….. ஆபத்தான நிலையில் வைத்தியசாலையிலுள்ள முதியவர்!!
யாழ்ப்பாணம் வெலிங்டன் சந்தியில் இன்று(18/02/2023) மதியம் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர் ஒருவர் அதனைக் கட்டுப்படுத்த முடியாமல் வயோதிபர் ஒருவரின் மேல் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதனால்,
பின் தலையில் பலத்த காயமடைந்த குறித்த வயோதிபர் அங்கிருந்த முச்சக்கர வண்டியில் ஏற்றப்பட்டு, யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிவேகத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்தியமை மற்றும் மோட்டார் சைக்கிளை திருப்புவதற்குரிய சமிஞ்சைகளைப் பயன்படுத்தாமை விபத்துக்கான பிரதான காரணம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக யாழ்ப்பாண காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன்,
அங்கு வருகை தந்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.