சுமாத்திரா தீவுகளில் இன்று 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்….. இலங்கைக்கு சுனாமி அபாயம்!!
சுமாத்திரா தீவுகளில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.
எனினும்,
தற்போது இலங்கைக்கு சுனாமி அபாயம் நீங்கியுள்ளதாக இலங்கையின் சுனாமி எச்சரிக்கை நிலையம் அறிவித்துள்ளது.
எனவே,
இலங்கையின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் அச்சம்கொள்ள வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை அண்மித்த இந்தியப் பெருங்கடலில் பாரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் 6.6 ரிச்டர் அளவில் இன்று(30/12/2023) காலை 10.49 மணி அளவில் ஏற்பட்டுள்ளது.
இதனால்,
நாட்டைச் சூழவுள்ள கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையத்தினால் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் நேற்று(29/12/2023) மாலைத்தீவுக்கு அருகில் இரு நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் சிரேஷ்ட நில அதிர்வு நிபுணர் நில்மினி தல்தேனா தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னதாக,
ரிக்டர் அளவுகோலில் 4.8, 5.2 மற்றும் 5.8 என 3 நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்ததாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்திருந்தது.