ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறும் ஒருவரிடம் 6 வீதத்திற்கும் அதிக வரி….. இறைவரியில் புதிய திருத்தம்!!
2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தை திருத்துவதற்காக உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசியக் கொள்கை அமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதன்படி,
ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறும் ஒருவரிடம் 6 வீதத்திற்கும் அதிக வரியை அறவிட திட்டமிடப்பட்டுள்ளது.
மிக உயர்ந்த தனிநபர் வருமான வரி விகிதம் 36% ஆக உள்ளது.
வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் அரச வருமானத்தை அதிகரிப்பது உள்ளிட்டசர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உறுதியளித்த தொடர்ச்சியான பொருளாதார சீர்திருத்தங்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.