துப்பாக்கி சூட்டு போட்டிகளில் தங்கங்களை குவித்த தல அஜித்!!
வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார்.
‘ஏகே 61‘ எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
சினிமாவை தாண்டி பைக் ரேஸ், போட்டோகிராபி போன்றவற்றிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி அஜித் வருகிறார்.
திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபின் கிளப் சார்பில் 47-வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 24-ஆம் தேதி துவங்கி ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் பங்கேற்பதற்காக சில தினங்களுக்கு முன்பு நடிகர் அஜித் திருச்சி சென்றார்.
அதன்பின்,
அங்கு 3 பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் அவர் கலந்துக் கொண்டார்.
இந்நிலையில்,
அஜித் கலந்து கொண்டு வெற்றிபெற்ற பட்டியல் வெளியாகியுள்ளது.
அஜித்குமார், சென்டர் பயர் பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் மாஸ்டர் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கம், 50 மீட்டர் ப்ரீ பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கலப் பதக்கம், ஸ்டாண்டர்டு பிஸ்டல் ஆண்கள் அணி பிரிவில் வெண்கல பதக்கம் என 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளார்.
பதக்கங்களை குவித்த அஜித்துக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.