சுற்றுலா பயணிக்கு எரிபொருள் வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி….. காவல்துறை மா அதிபருக்கு கடிதம் மூலம் தனது அதிருப்தியை தெரிவித்த இலங்கை சுற்றுலாத்துறை !!
காலியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் சுற்றுலா பயணி ஒருவருக்கு காவல்துறை அதிகாரி எரிபொருள் வழங்க மறுத்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
நேற்றையதினம்(02/07/2022) மோட்டார் சைக்கிளில் சென்ற சுற்றுலா பயணி எரிபொருள் பெறமுயற்சித்த வேளை காவல்துறை அதிகாரி ஒருவர் அவரை தடுத்துள்ளார்.
இது தொடர்பான Twitter பதிவை பார்வையிட பார்வையிட இங்கே சொடக்குங்கள்……………
இது தொடர்பாக வெளியான காணொலி காட்சியில் சுற்றுலாப் பயணிக்கு எரிபொருளை வழங்க மறுத்த காவல்துறை அதிகாரி எமது தேசிய கொள்கை சுகாதார ஊழியர்களுக்கே தற்போது எரிபொருள் வழங்குவது என தெரிவித்துள்ளார்.
குறித்த காவல்துறை அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் இலங்கை சுற்றுலாத்துறை தனது அதிருப்தியை காவல்துறை மா அதிபருக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.