பாடசாலை பேருந்துடன் மோதியது தனியார் பயணிகள் பேருந்து….. 5 மாணவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில்!!
தியத்தலாவை பகுதியில் பாடசாலை பேருந்து ஒன்றும், தனியார் பயணிகள் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவமானது இன்று(16/06/2023) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொரலந்தையில் இருந்து பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பண்டாரவளை நோக்கிப்
பயணித்த பேருந்துடன்
மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது,
சிறு காயங்களுக்கு உள்ளான 5 மாணவர்களும், பாடசாலை பேருந்தின் சாரதியும், தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில்,
தியத்தலாவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.