இரகசியமான முறையில் நடத்தப்பட்ட முகநூல் விருந்து….. 50 க்கும் மேற்பட்ட பாடசாலை சிறுவர்கள், ஏகப்படட இளைஞர், யுவதிகள் கைது!!

கம்பளை நீதவான் நீதிமன்றத்திற்கு சற்று தொலைவில் உள்ள இடத்தில் மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்ட முகநூல் விருந்தொன்றை மத்திய மாகாண கலால் திணைக்கள அதிகாரிகள் குழு சோதனையிட்டுள்ளது.

கலால் திணைக்களத்தின் தகவலின்படி,

இந்த விருந்தில் பங்கேற்ற 300 க்கும் மேற்பட்ட இளைஞர்களில்,

50 க்கும் மேற்பட்டோர் சிறுவர்களான பாடசாலை மாணவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

அந்த விருந்தில் 14-18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் பங்கேற்றதாக தெரிவித்த கலால் துறை அதிகாரிகள்,

அந்த பள்ளி மாணவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான உதவி கலால் ஆணையாளர் உபுல் செனவிரத்னவுக்கு கிடைத்த தகவலின்படி,

முகநூல் குழுவுடன் கலால் அதிகாரிகளையும் விருந்தில் இணைத்து தகவல்களைப் பெற்றுள்ளார்.

முகநூல் விருந்து கடந்த சனிக்கிழமை (24/09/2022) பிற்பகல் 02:00 மணி தொடக்கம் நள்ளிரவு வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இதன்போது,

இரு இளம் கலால் அதிகாரிகளும் இரண்டு பெண் அதிகாரிகளும் காதலர்கள் போல் நடித்து விருந்தில் கலந்து கொண்டனர்.

மத்திய மாகாணங்களுக்குப் பொறுப்பான உதவி கலால் ஆணையாளர் உபுல் செனவிரத்னவின் பணிப்புரையின் பேரில், கம்பளை, ஹட்டன் மற்றும் நுவரெலியா கலால் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் பங்களிப்புடன் கடந்த சனிக்கிழமை(24/09/2022) மாலை 5 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது,

​​பங்கேற்பாளர்களில் பெரும்பாலானோர் பல்வேறு போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை பயன்படுத்தியதாகவும்,

மிகவும் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை வைத்திருந்த 12 பேர் கம்பளை மேலதிக நீதவான் அஜித் உடுகம முன்னிலையில் நேற்று முன்தினம் (25/09/2022) ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த குழுவினரை நேற்று (26/09/2022) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *