வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை!!

கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை இன்று (14/08/2022) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர்தெரிவிக்கின்றனர்.

கண்டி, அம்பிட்டிய வீதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கண்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *