பனாமாவில் திடீரென அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள்….. இன்னமும் சேத விபரங்கள் கணக்கிடப்படவில்லை!!
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பனமா – கொலம்பியா எல்லையில் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது.
முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 9 நிமிடங்களில் மீண்டும் அதேபகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவானது.
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளிவிரவல்லை.