அமெரிக்காவில் 76 நாடுகளைச் சேர்ந்த 15300 பேரை பின்தள்ளி….. உலங்கின் அதீத புத்திசாலி என்ற பெயரெடுத்த தமிழ் சிறுமி!!
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இளைஞர் திறன் மையம் நடத்திய உலகின் மிகச் சிறந்த புத்திசாலி மாணவருக்கான போட்டியில் இந்திய–அமெரிக்க சிறுமி நடாஷா பெரியநாயகம்
தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம்பிடித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள புளோரன்ஸ் எம் கவுடினியர் நடுநிலைப்பள்ளியில் படித்து வருகின் நடாஷா பெரியநாயகத்தின் வயது 13.
இவரது பெற்றோர்கள் சென்னையில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள்.
வகுப்பில் திறமையான மாணவியாக திகழும் நடாஷா 2021 இல் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் இளைஞர் திறன் மையத்தின் தேர்வை எழுதியுள்ளார்.
உலகெங்கும்,
76 நாடுகளைச் சேர்ந்த 15300 பேர் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர்.
இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தாங்கள் வகுப்பைவிட உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இணையான கற்கும் திறன்,
அதை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்களா என்பதை ஆராய்கின்றனர்.
அப்படி சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
2021 இல் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நடாஷா 8 ஆம் வகுப்பு மாணவர்களின் திறனில் 90 % வரை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரது கணித மற்றும் செயல்பாட்டு திறன் அவரது புத்தி கூர்மைக்கு இந்த சிறப்பு அந்தந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நடந்த போட்டியிலும் இவர் பங்கேற்று சிறப்பிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.