தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக இளம் தாம்பதிகள்….. நடப்பதறியாது தவிக்கும் இரு வயது குழந்தை!!
அனுராதபுரம் – திருக்கோவிலில் கணவனும் மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஒரே வீட்டில் இன்று(21//11/2023) சடலங்களாக மீட்கப்பட்ட இவர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
திருக்கோவில் பகுதி நான்கைச் சேர்ந்த 28 வயதுடைய மனோகரன் தேவதர்சன் மற்றும் 23 வயதுடைய ரவிந்திரகுமார் நிலுயா இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
திருமணமாகி மூன்று வருடங்களாகும் நிலையில் இவர்களுக்கு இரண்டு வயதுடைய பெண்குழந்தை இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
சடலங்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.