ஆணாக மாறிய ஷிவானி… புகைப்படத்தை வெளியிட்டு கண்ணீர் விட்ட கொடுமை!!
நடிகை ஷிவானி ஆணாக மாறிய புகைப்படத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, கண்ணீர் வடித்துள்ளார்.
மிகச் சிறிய வயதில் பிரபலமாக முடியுமா என்று மற்ற நடிகைகள் பொறாமை கொள்ளும் வகையில் ரசிகர்களின் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் ஷிவானி.
சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இவரது புகைப்படத்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.
சின்னத்திரை டு வெள்ளித்திரை என்ட்ரி கொடுக்க மிகவும் முயற்சி செய்து வரும் இவர் பிக்பாஸிற்கு சென்ற பின்பு வேற லெவலுக்குச் சென்றுள்ளார். ஆனால் சினிமா வாய்ப்பு கிடைக்காமல் காத்திருக்கிறார்.
ஆதலால் அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை போட்டு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஷிவானியை யாரோ ஒருவர் கண்ணீர் சிந்த வைத்துள்ளார்.
ஆம் ஷிவானி புகைப்படத்தினை அப்படியே, 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்த ஹீரோவாக மாற்றி அட்டகாசம் செய்துள்ளனர். ஆனால் இப்புகைப்படம் ஷிவானி பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே நெட்டிசன்கள் செய்த வேலையாகும்.
இதனை தற்போது அவதானித்த ஷிவானி, இது யாரு பார்த்த வேலைப்பா என்று கூறி கண்ணீர் சிந்துவது போன்று சிம்பலை போட்டு, இப்புகைப்படத்தினை பதிவிட்டிருந்தார்.
ஆனால் ஒரே நாளில் இப்புகைப்படத்தில் தனது டுவிட்டர் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார். தற்போது புடவையில் அட்டகாசமான அழகுடன் வெளியிட்டுள்ள காணொளி ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.