ஆறு மாதங்களாக தந்தையிடமிருந்து பதில் இல்லை : வெளிநாட்டிலிருந்து வந்த மகன் கண்ட அதிர்ச்சி காட்சி
ஆறு மாதங்களாக தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காத தந்தைக்கு என்ன நடந்தது என்பதை அறிய இத்தாலியில்(italy) இருந்து வந்த மகன் நம்ப முடியாத சம்பவத்தை கண்டுள்ளார்.
ஆம் வீட்டினுள் தந்தை உயிரிழந்த நிலையில் எலும்புக்கூடாக கிடப்பதை கண்டு மகன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
களுத்துறை(kalutara) நாகொட பகுதியில் தனது 70 வயதான தந்தை தனியாக வசித்து வந்ததாக மகன் தெரிவித்துள்ளார்.
இந்த வீட்டில் சிலகாலம் முன்பு வசித்து வந்த தாயும் இறந்துவிட்டார். இத்தாலியில் இருந்த அவரது மகன், இலங்கையில் தந்தையிடம் நலம் விசாரித்துவருவதுடன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்தார்.
6 மாதங்களாக தந்தைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தும் பதில் இல்லை. இத்தாலியில் இருந்து அக்கம் பக்கத்தினரை அழைத்துப் பார்த்தபோது, வீடு சேதமடைந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கடந்த 19ம் திகதி மகன் இலங்கைக்கு வந்து தந்தைக்கு என்ன நடந்தது என அறிய வீட்டிற்கு சென்றுள்ளார். வீடு பாழடைந்து கிடந்ததால், மகன் கதவை உடைத்து சோதனையிட்டபோது, எலும்பு மட்டுமே உருகிய நிலையில் தந்தை சடலமாக கிடந்தார்.
இது தொடர்பில் காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, முதற்கட்ட விசாரணைகளின் பின்னர், எலும்புக் கூடாக மாறிய சடலம் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்தவர் அவரது தந்தையா என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.