வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் அரசாங்கத்தின் முக்கிய வேண்டுகோள்!!
இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு வாழ் இலங்கையார்களிடம் இராஜாங்க அமைச்சரும், விசேட வைத்திய நிபுணருமான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றுடனான உரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் வைத்தியசாலைகளில் வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவற்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.