தனுஷிற்கு கதாநாயகியாகும் பிகில் பட நடிகை!!

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு நேற்றுதொடங்கியுள்ளது.

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பிரபலமானவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ‘நானே வருவேன்’ திரைப்படம் உருவாக உள்ளது.
தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி தொடங்கப்படவில்லை.
தற்போது இதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
இதில் கதாநாயகியாக பிகில் படத்தில் நடித்த இந்துஜா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்த பூஜையில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *