“சூர்யா 42” படத்தின் அதிரடி Update குடுத்த படக்குழு….. துள்ளி குதிக்கும் ரசிகர்கள்!!

சிறுத்தை‘, ‘வீரம்‘, ‘விஸ்வாசம்‘, ‘அண்ணாத்த‘ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.

சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை Studio Green  மற்றும் UV Creations நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ள இப்படம் 3D முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையடுத்து,

இப்படத்தின் Title மற்றும் Release Date வருகிற 16-ஆம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில்,

இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் புதிய Poster  ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *