ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் பிரபல நடிகை “ஷீலா ராஜ்குமார்”!!

திரௌபதி, மண்டேலா, டூ லெட் படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி இருப்பது அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

பல சர்வேதேச விருதுகளை பெற்ற டூ லெட், மண்டேலா, திரௌபதி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றவர் ‘ஷீலா ராஜ்குமார்’.
தற்போது இவர் பல படங்களிலும் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில்,
அவருடைய அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்களை ஷீலா ராஜ்குமார் பகிர்ந்துகொண்டார்.
அவர் கூறியதாவது,
“வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகிவரும் பேட்ட காளி என்கிற வெப் சீரிஸில் நடிக்கிறேன்..
‘அண்ணனுக்கு ஜே’ படத்தை இயக்கிய ராஜ்குமார் இந்த வெப்சீரிஸை இயக்குகிறார்.
‘மேற்கு தொடர்ச்சி மலை ஆண்டனி’ இதில் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தயாராகும் இந்த வெப்சீரிஸ், வேல்ராஜ் ஒளிப்பதிவு, சந்தோஷ் நாராயணன் இசை என திரைப்படத்திற்கு இணையாக இந்த வெப் சீரிஸ் உருவாகி உள்ளது.
பேட்ட காளி என்கிற ஜல்லிக்கட்டு காளையை வளர்க்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
கோலிசோடா உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பு செய்த எடிட்டர் ராஜா சேதுபதியின் முதல் தயாரிப்பான ஜோதி என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன் 8 தோட்டாக்கள் ஹீரோ வெற்றி இதில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
க்ரிஷா குரூப், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
கிருஷ்ணா அண்ணாமலை இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கும் குடும்ப வன்முறை மற்றும் குழந்தைகள் கடத்தலை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
இதுதவிர தமிழில் இன்னும் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.
அவற்றை பற்றிய தகவல்கள் விரைவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
இன்னொரு பக்கம் மலையாளத்தில் ஏற்கனவே கும்பலாங்கி ‘நைட்ஸ்’ என்கிற படத்தில் நடித்ததற்காக நிறைய பாராட்டுக்கள் கிடைத்தன.
தற்போது மீண்டும் மலையாளத்தில் பெர்முடா என்கிற படத்தில் நடித்து வருகிறேன்.
‘ராஜீவ்குமார் ‘என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார்” என்று ஷீலா ராஜ்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *