சாதாரண தர பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!
2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகளை இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனுமதி அட்டைகளை இதுவரை பெற்றுக்கொள்ளாத மாணவர்களை WWW.DOENETS.LK ஊடாக பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிட்டு அனுமதி அட்டையின் பிரதியைப் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
2021 க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் எதிரவரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகின்றமை குறிப்பிடத்தக்கது.